லேகியம் செய்யத் தேவையான பொருட்கள் :

இஞ்சி - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
சீரகம் - 25 கிராம்
தனியா - 10 கிராம்
நெய் - 25 கிராம்


செய்யும் முறை :

தனியாவையும், சீரகத்தையும் த‌ண்‌ணீ‌ரி‌ல் அரை மணி நேர‌ம் ஊற வைக்கவும்.

இளசாக இரு‌க்கு‌ம் இ‌ஞ்‌சியாக‌ப் பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஊற வை‌த்த த‌னியாவையு‌ம், ‌சீரக‌த்தையு‌ம் இ‌ஞ்‌சியுட‌ன் சே‌ர்‌த்து அரை‌க்கவு‌ம்.

கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இற‌க்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

இதனை அனைவரு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். பலகார‌ங்களா‌‌ல் வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினைகளை இ‌ந்த லே‌கியமே ச‌ரி செய்து ‌விடு‌ம்.