தேவையான பொாருள்கள்.

உளுத்தம்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
 அரை கீரை - 1 கட்டு
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய  இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைாயான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :



பருப்புகளை   1   மணிநேரம் ஊற வைக்க  வேண்டும்.

கீரையை  மண் போக   நன்கு  கழுவி   பொடியாக நறுக்கி வைக்கவும்.

பருப்பில் உள்ள   தண்ணீரை நன்கு வடித்து விட்டு   மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன்   நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடா யில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை  மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான  பருப்பு கீரை வடை  ரெடி.