தேவையான பொருட்கள் 
சிக்கன் - அரை  கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால்  ஸ்பூன்
தயிர் - 3ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி   - 10   அரைப்பதற்கு


தாளிப்பதற்கு
பட்டை - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கிராம்பு - 3

அரைப்பதற்கு

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் -  1  ஸ்பூன்
சீரகப் பொடி -  கால்  ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனுடன் முதலில்  கொடுத்துள்ள   மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணி நேரம்   ஊற வைக்கவும்.

வெங்காயம்  தக்காளியை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் முந்திரியை  சிறிது  தண்ணீர்  சேர்த்து  பேஸ்ட்   மாதிரி   அரைத்து  கொள்ளவும்.

பின்பு  கடாயை  அடுப்பில் வைத்து அதில்   2   ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,   தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து  அதனுடன்  வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து   5 நிமிடம் வதக்கி அதனுடன்   மல்லித் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5  நிமிடம்  வதக்கி பின்பு  இறக்கி,ஆற வைத்து  மிக்சியில்  நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு  கடாயை அடுப்பில் வைத்து, அதில்  2   ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு, கடாயை மூடி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சிக்கன்   ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா, முந்திரி பேஸ்ட் தேவையான அளவு தண்ணீர்   உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்

 சிக்கன்  நன்கு   வெந்து   கிரேவி  கெட்டியானவுடன்   கொத்தமல்லியை தூவி  இறக்கிவிட வேண்டும்.


இப்போது காரசாரமான சிக்கன் கிரேவி  ரெடி