பிரான் 65 இறால் கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த பிரான் 65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

பிரான் 65 செய்ய தேவையான பொருட்கள்:
பிரான் – 300
 கிராம் கார்ன் மாவு – 2 
டீஸ்பூன் மைதா மாவு – 1
 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1
ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1
 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 
ஸ்பூன் சீரகத்தூள் – 1/2
 டீஸ்பூன் மல்லித்தூள் – 1 
டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4
 டீஸ்பூன் முட்டை – 1
 எண்ணெய் – தேவையான அளவு
பிரான் 65 செய்முறை:

முதலில் பிரான் கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பவுலில் கார்ன் மாவு, மைதா மாவு,இஞ்சிபூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மசாலா பொடிகளையும் சேர்த்து கந்து கொள்ளவும்அனைத்து மசாலாவினையும் கலந்த பிறகு ஒரு முட்டையினை உடைத்து ஊத்தி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் இறால் சேர்த்து கலந்து அந்த மாவினை 20 நிமிடம் வரை ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த பிரானை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரான் 65 தயார்.