அந்த காலத்தில் இருந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி,  அழகாக இருந்ததிற்கு என்ன காரணம் என்று தெரியுமா.? அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புகள் தான்.அதுவும் அவர்களது சரும பராமரிப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் தான். சரி வாங்க இவற்றில் பாட்டி சொல்லும் அழகு குறிப்பு என்னவென்று காண்போம்.


அழகு குறிப்பு (Beauty tips in tamil)1:

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டிக்கொண்டு அந்த வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக அமர்ந்திருக்கவும்.
இவ்வாறு அமர்ந்திருப்பதினால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் நீங்கும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.

இந்த முறையை தான் இப்போது அனைத்து அழகு நிலையங்களிலும் ஃபேஸ் மாஸ்க் போட்ட பின் கண்களில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.