தொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..!
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – அமிர்த பழம்
1000 கணக்கில் மருத்துவ குணம் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளது. நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் மிக முக்கியமானது உடல் எடை குறைய மற்றும் தொப்பை பிரச்சனை தான்.
இவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி முரப்பா
இஞ்சி முரப்பாவை போன்றது தான் நெல்லிக்காய் முரப்பாவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா.
இதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி டீ
ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும்.
இதனை தயாரிக்க தேவையானவை…
- நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
- வெல்லம் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.
இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி மிட்டாய்
நெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடல் எடையை குறைக்க நெல்லி மிட்டாய் சிறந்த தேர்வு.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி பொடி
நெல்லிக்காயை அறிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
0 Comments