குஷ்கா செய்ய தேவையான பொருட்கள்: 
 நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி இலை – 2 பட்டை – 1
ஏலக்காய் -3 
கிராம்பு – 4
சோம்பு – 1 டீஸ்பூன் 
வெங்காயம் – 2 உப்பு – தேவையான அளவு 
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு 
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
 தக்காளி – 2 
பாசுமதி அரிசி – 2 கப்
 புதினா இலை – சிறிதளவு 
கொத்தமல்லி – சிறிதளவு

 குஷ்கா செய்முறை: 
முதலில் ஒரு குக்கரில் நெய் விட்டு அதனுடன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய்,கிராம்பு, சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சிப்பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்றாக குழைந்த பிறகு 1/2/ மணிநேரம் ஊறவைத்த பாசுமதி அரிசியினை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். பிறகு அதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 விசில் வரை விட்டு இறக்கினால் சுவையான குஷ்கா தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம் 
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4